ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில், இளையான்குடி. Arulmigu Rajendra Chozhiswarar temple,இளையான்குடி


மிகப்பழமையான திருத்தலம்.

63 நாயன்மார்களில் ஒருவரான 
மாற நாயனார் வாழ்ந்து முக்தியடைந்த புண்ணியத்தலம்.

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்,  இளையான்குடி.
*****-**--******************:******-***

 மூலவர் ' ராஜேந்திர சோழீஸ்வரர்.

அன்னை: ஞானாம்பிகை.

தலவிருட்சம் : வில்வம்.

தீர்த்தம்: தெய்வபுஷ்கரணி

சிறப்பு :: பிறர்க்கு உதவும் குணம் வளரவும்
அன்னத்திற்கு குறைவில்லா நிலை
வரவும் இத்தல இறைவனை வேண்டினால் நிச்சயமாக நடக்கும்.

தன்னை நாடிவரும் சிவனடியார்களுக்கு குறைவில்லா அன்னம் அளித்தார் மாறநாயனார்.

தன் நிலத்தில் விதைத்திருந்த
நெல்லை கொண்டு இறைவனுக்கு
முளைவாரி அமுது அளித்தவர் 
மாறநாயனார்.

 அன்னதானம் செய்து சிவனருள் 
பெற்றதால் இவருக்கு பசிப்பிணி
மருத்துவர் என்ற பெயரும் உண்டு.
இக்கோவிலில் இவருக்கு தனி சன்னதி உண்டு.

அவர் வாழ்ந்த வீடும் நிலமும் ( முளைவாரி அமுதளித்த நாற்றங்கால்)  கோவில் அருகிலேயே 
காப்படுகிறது.

மாறநாயனார் குருபூஜையன்று
மாலையில் சிவன் அம்பாள் மாறநாயனார் அவரது மனைவி
புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே
சப்பரத்தில் எழுந்தருள்வது சிறப்பாகும்.அன்று அவர் இறைவனுக்கு படைத்த தண்டுக்கீரை 
பிரதான நெய்வேத்திய பொருளாகும்.

 மகரிஷி ஒருவர் அளித்த சாபத்திற்கு விமோசனம் வேண்டி பூலோககம்
வந்த இந்திரன் பல தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்  இந்திரன் லிங்கம் பிரதிஷ்டை  செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

அன்னை ஞானம்பிகா என்பதால்
மாணவர்கள் அன்னையிடம் வேண்டினால் சிறந்த ஞானம் பெறலாம்.
இத்தலத்தில் அன்னதானம் செய்தால்
மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

இத்தலத்தில் முருகனுடன் தெய்வானை மட்டுமே இருக்கிறார்
வள்ளி கிடையாது.இந்திரன் பூஜித்த தலம் எஎன்பதால் வள்ளி காணப்படவில்லை.

 சிவகங்கை அருகே இத்தலம்
உள்ளது.

திருச்சிற்றம்பலம்.
****************-****

T

Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022