திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் மூலவர் - வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் - வேதவல்லி உற்சவர் - பார்த்தசாரதி விமானம் - ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம். தீர்த்தம் - கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீகம். கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே தீர்த்தம். நாமாவளி - ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கடேகிருஷ்ணாய நமஹ பாசுரம் : விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும் வேழமும்பாகனும்வீழ * செற்றவன்தன்னை * புரமெரிசெய்த சிவனுறுதுயர்களைதேவை * பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு பார்த்தன்றன்தேர்முன்நின்றானை * சிற்றவைபணியால்முடிதுறந் தானைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே பெரியதிருமொழி (1068) பேயாழ்வார் -1, திருமழிசை ஆழ்வார் - 1, ...