பயற்ணீஸ்வரர் திருக்கோவில்உடையார்பாளயம்அரியலூர் மாவட்டம்.
பயற்ணீஸ்வரர் திருக்கோவில்
உடையார்பாளயம்
அரியலூர் மாவட்டம்.
மூலவர் : பயற்ணீஸ்வரர்.
அன்னை :நறுமலர் பூங்குழலி.
தலவிருட்சம் : மகிழமரம்.
தலசிறப்பு ;; தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களில் உடையார்பாளையம் ஜமீன் மிகுந்த
சிறப்பை உடையது.
ஆலயம் 1400 ஆண்டுகள்
பழமையானது.
இக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் வில் வடிவில் உள்ளது.
எப்போதும் தண்ணிர் வற்றாத பெருமை உடையது.இக்கோவிலில் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.
அன்னியர் படையெடுப்பின் போது
காஞ்சிபுரம் சிதம்பரம் போன்ற பல ஆலயங்களின் சிலைகள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டது.
இத்தல இறைவன் மிளகை பயிராகச் செய்து திருவிளையாடல் புரிந்தவர்.
இதனால் இறைவன் பயற்ணீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட
சோழபுரம் அருகே 10 கிமீ தொலைவில் உள்ளது.அனைவரும்
தரிசிக்க வேண்டிய அழகான அற்புதமான திருத்தலம்.
Comments
Post a Comment