தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலம்சுழி வருணேஸ்வரர் சிவன்கோயில்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலம்சுழி வருணேஸ்வரர் சிவன்கோயில்
Thiruvalanchuzhi Varuneswarar temple
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஏழாவது கிமி-ல் உள்ளது திருவலம்சுழி. இங்கு பிரசித்தி பெற்றது கபர்தீஸ்வரர்/வெள்ளை பிள்ளையார்கோயில். இதே ஊரில் பிரதான சாலையில் சோழா ஓட்டலின் எதிரில் பெரிய தென்னம்தோப்பினுள் உள்ளார் இறைவன் வருணேஸ்வரர் பெரிய சிவாலயமாக இருந்து தற்போது லிங்கமூர்த்தியும் அவரின் எதிரில் நந்தியும், பைரவரும், ஒரு விநாயகரும் மட்டும் ஓர் தகர கொட்டகையில் உள்ளனர். உடைந்த நந்தியொன்று அருகில் கிடத்தப்பட்டுள்ளது.
லிங்கமூர்த்தியின் அளவினை வைத்து பார்த்தால் அவரது பழம் கோயில் எத்தனை பெரிதாய் இருந்திருக்கும் என எண்ணி வியக்கவேண்டியுள்ளது. “எல்லாம் சில காலம்” என்பது இறைவனுக்கும் சேர்த்து தான் போலிருக்கிறது.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்
Comments
Post a Comment