அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் ஓசூர்
மும்மூர்த்திகளையும் ஒரே நாளில் வணங்க வேண்டுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூன்று மலைக் குன்றுகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. அவற்றில் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் குடிகொண்டுள்ளனர்.
இவற்றில், முதல் குற்றில் பிரம்மாவும், இரண்டாவது குற்றில் விஷ்ணுவும், மூன்றாவது குன்றில் சிவனும் அருள்பாலிக்கன்றனர்.
பிரம்மன் அமர்ந்துள்ள மலை பிரம்ம மலை என்றும், விஷ்ணு அமர்ந்துள்ள மலை பெருமாள் மலை என்றும், சிவபெருமான் அமர்ந்துள்ள மலை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலை என்றும் அழைக்கப்படுகின்றன.
இங்கு வருபவர்கள், ஒரே நாளில் மும்மூர்த்திகளையும் வணங்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். இதன் மூலம், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களின் மும்மூர்த்திகளிள் அருளையும் முழுமையாகப் பெறலாம்.
வாருங்கள் ஓசூர் திருத்தலத்திற்கு.
ஓம் நமோ நாராயணா !
ஓம் நமசிவாய !!
Comments
Post a Comment