Arulmigu Malaikoluntheeswarar Temple ,Kunoor கொழுந்திஸ்வரர் திருக்கோவில். குன்னூர்.விருதுநகர் மாவட்டம்
ஓம் வடிவில் அமைந்துள்ள மலை.
சகல நோய்களுக்கும் நிவாரணம் தரும் குடவறை கோவில்
மலைக் கொழுந்திஸ்வரர் திருக்கோவில். குன்னூர்.
விருதுநகர் மாவட்டம்.
*****************************************
மூலவர் :கொழுந்தீஸ்வரர்
அன்னை:மரகதவள்ளி.
தலவிருட்சம் :இலுப்பை.
தீர்த்தம் ::அர்ச்சுணண் சுணை தீர்த்தம்
சிறப்புகள் : மலைமீது அமைந்துள்ள அழகிய குடவறை கோவில்.
பல்லவர் காலத்தில் உருவான மிகப்பழமையான கோவில்.
மூலவர் நந்தி நடராஜர் தட்சிணாமூர்த்தி விநாயகர் போன்ற தெய்வங்கள் குடவறை உள்ளே
காணப்படுகிறது. அன்னை மரகதவள்ளி தனியே வெளியில் இருந்து அருள்பாளிக்கிறார்.
அர்ச்சுணன் எய்த அம்பு இந்த மலையில் பட்டு தண்ணீர் பீறிட்டது.அதுவே வற்றாத சுணையாக மலையில் உள்ளது.இதையே இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
திருவோட்டுக்கேணி என்ற
மற்றொரு தீர்த்தமும் உள்ளது.
இவ்விரு தீர்த்தமும் சகல நோய்ளுக்கும் அருமருந்தாய் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த மலையானது ஓம் வடிவத்தில்
அமைந்திருப்பது மிகச்சிறப்பு.
மலையின் மீது அமைந்துள்ள மிக அழகான கோவில்.அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணண் கோவில், மூவரைவென்றான் அருகில் உள்ளது.
Comments
Post a Comment