அருள்மிகு சுகந்தவனேசுவரர் திருக்கோவில் பெரிச்சிகோவில்
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான
திருத்தலம்.
போகர் சித்தரால் உருவான நவபாஷான பைரவர் சிலை.
( காசி பைரவர்)
அருள்மிகு சுகந்தவனேசுவரர்
திருக்கோவில் பெரிச்சிகோவில்.
+************************************
மூலவர் : சுகந்தவனேசுவரர்.
அன்னை: சமீபவல்லி அம்மன்
தலவிருட்சம் : வன்னி மரம்.
சிறப்புகள் : அஷ்டபைரவ தலங்களில் நவபாஷன பைரவ தலம்.பைரவர்
தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாளிக்கிறார்.
இந்த நவபாஷன சிலையை
போகர் சித்தர் உருவாக்கியதாக
நம்பப்படுகிறது.காசி பைரவர் என
அழைக்கப்படுகிறார்.
பைரவர் மண்டைஓடு மாலை அணிந்து காட்சிதருகிறார்.
நவபாஷன பைரவரின் சக்தியை
பக்தர்கள் தாங்கமுடியாது என்பதால்
வடமாலை பிரசாதம் மற்றும்
அபிஷேக தீர்த்தம் பக்தர்களுக்கு
வழங்கப்படுவது இல்லை.
வடமாலை சன்னிதிக்கு மேலே
வீசப்படுகிறது. இதை பறவைகள்
கூட உண்பதில்லை என்பது
ஆச்சர்யமான விஷயம்.
அபிசேக நீரை பக்தர்கள் தொடாதவாறு கோவிலுக்கு
வெளியே கொட்டப்படுகிறது.
சனி பகவான் வன்னிமரத்தின் கீழிருந்து அருள்பாளிக்கிறார்.
சனிபகவான் ஒற்றைமுகத்துடன் காட்சி தருவது சிறப்பு.
அன்னை சமீபவல்லி பக்தர்களுக்கு
அருகே இருந்து காப்பவள் என்பதால்
இப்பெயர்.
மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னன்
மிகப்பெரிய போர் ஒன்றில் வென்றபின் சிவஆலயம் அமைக்க
விரும்பினான்.
இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவியது.சிவபெருமான் அவன்
கனவில் தோன்றி சுகந்த மலர்கள் கொண்ட இவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார்.
அதன்படி மன்னன் இந்த இடத்தில்
கோவில் எழுப்பினான்.இறைவன் பெயரும் சுகந்தவனேசுவரர் என அழைக்கப்படுகிறார்.
அமைவிடம் : சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சமீபம்
கண்டரமாணிக்கம் அருகே உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த. பைரவ ,மற்றும்
சனிபகவான் தலமாகும்..
திருச்சிற்றம்பலம்.
********-************
Comments
Post a Comment