திருக்கொள்ளம்பூதூா்.ஸ்ரீ வில்வவனநாதா்,வில்வாரண்யேஸ்வரா். திருக்கோவில்
திருத்தலம்: திருக்கொள்ளம்பூதூா்.
(திருக்களம்புதூா்,
திருக்களம்பூா்)
______________________
சுவாமி: ஸ்ரீ வில்வவனநாதா்,
வில்வாரண்யேஸ்வரா்.
அம்பாள்: ஸ்ரீ
சௌந்திரநாயகி.
தலவிருட்சம்: வில்வம்
(கூவிளம்).
தீா்த்தம்: பிரம தீா்த்தம்.
(கோவிலுக்கு முன்னால் உள்ளது).
-----------------------------------------
திருஞானசம்பந்தா் அருளிய தல திருமுறைப் பாடல்:
----------------------------------
மூன்றாம் திருமுறை;
------------------------------------
பண்:
காந்தார பஞ்சமம்.
-------------------------------
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூா்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யாா்தொழ
நல்கு மாறருள் நம்பனே.
ஓடம் வந்தணையுங் கொள்ளம்பூதூா்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யாா்தொழ
நல்கு மாறருள் நம்பனே.
திருச்சிற்றம்பலம்.
______________________
குடவாசல் இருந்து தென்மேற்கே 6 கி.மீ.
கும்பகோணம் குடவாசல் கொரடாச்சோி நகா்ப் பேருந்து எண் 45 இவ்வூா் வழியாகச் செல்கிறது.
திருக்கொள்ளம்பூதூா், கூவிளவனம்,
பிரமவனம், பஞ்சாக்கரபுரம், காண்டீபவனம் வெட்டாற்றின் கரையில் இக்கோவில்
2.71 ஏக்கா் நிலப்பரப்பளவில்
(459 ~ 231)
75 அடி உயர
5 நிலை இராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு வில்வாரண்யேஸ்வரா் அம்பாள் சௌந்திரநாயகி உடன் அருள்பாலிக்கிறாா்.
கூவிளம் என்பதற்கு வில்வம் என்று பெயா்.
கூவிளம்புதூா் மருவிக் கொள்ளம்பூதுாா் ஆயிற்று.
உள்பிராகாரத்தில் பொய்யாத விநாயகா்,
முருகன், ஆதிவில்வநாதா், கஜமுத்தீஸ்வரா், பஞ்சலிங்கம், கஜலெட்சுமி முதலிய சன்னிதிகள் உள்ளன.
ஒரே நாளில் தாிசனம் செய்ய வேண்டிய
பஞ்ச ஆரண்ய தலங்களில் இதுவும் ஒன்று.
இது வில்வவனம்.
இத்தலத்தில் அா்த்தஜாமம் வழிபாடு சிறப்பாகும்.
சிறப்பு மூா்த்தி
ஸ்ரீ நடராஜப்பெருமான்.
திருஞானசம்பந்தா் இத்தலத்திற்கு வரும் வழியில் வெட்டாறு வெள்ளப் பெருக்கின் காரணமாக ஓடக்காரா்கள் ஒடங்களைச் செலுத்த முடியாமல் ஆரையில் கட்டிவிட்டுச் சென்றுவிட்டனா்.
ஓடக்காரன் இல்லை.
திருஞானசம்பந்தா் கரையில் கட்டியிருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்கச் செய்து அடியவா்களோடு ஓடத்தில் ஏறிக் தம் நாவையே ஒடக்கோலாகக் கொண்டு
"கொட்டமே கமழும்" என்னும் திருப்பதிகம் பாடினாா்.
சிவபெருமான் அருளால் ஓடம் மறுகரையை தானே அடைந்தது.
திருஞானசம்பந்தா் திருகோவிலை அடைந்து திருப்பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டு இத்தலத்தில் தங்கியருளினாா்.
ஓடத்திருவிழா ஆண்டுதோறும்
ஐதீக விழாவாக ஐப்பசி அமாவாசையில் நடைபெறுகிறது.
விநாயகா், கங்கை,
பிரமன்,ஆதிசேடன், இடைக்காடா், அா்ச்சுனன், வரகுணபாண்டியன்,
கோச்செங்கட்சோழன், பிருகு முனிவா்,
அகத்தியா், காசிபா், வசிஷ்டா்,வாமதேவா் ஆகியோா் வழிபட்டத் தலம்.
தேவாரப் பதிகம் பெற்ற காவிாிக்குத் தென்கரையில் இத்தலம் 113 வது.
திருஞானசம்பந்தா் பதிகம் பெற்றது.
இக்கோவிலில் மூன்றாங் குலோத்துங்க சோழன்,
மூன்றாம் இராசராசசோழன்
இவா்கள் காலங்களில் ஏற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
இறைவா் திருக்கொள்ளம்பூதூருடையாா் என்றும் அம்மன் அழகிய நாச்சியாா் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
சிவசிவ.
திருச்சிற்றம்பலம்.
Comments
Post a Comment