திருக்கோட்டூா். கொழுந்தீஸ்வரா்அம்பாள் தேனாம்பிகை
திருத்தலம்: திருக்கோட்டூா்.
---------------------------------
🌸🌸🌸🌸🌸🌸🌸
சுவாமி: ஸ்ரீ கொழுந்தீஸ்வரா்.
அம்பாள்: ஸ்ரீ தேன்மொழியம்மை,
தேனாம்பிகை.
தீா்த்தம்: அமிா்த தீா்த்தம்.
தலவிருட்சம்: வன்னி.
______________________
திருஞானசம்பந்தா் சுவாமிகள் அருளிய தல தேவாரப் பாடல்:
--------------------------------------
இரண்டாம்
திருமுறை.
-------------------------------------
பண் : நட்டராகம்.
--------------------------------------
நீலமாா் தருகண்டனே நெற்றியோா் கண்ணனே யொற்றை விடைச்
சூலமாா் தருகையனே துன்றுபைம் பொழில்கள் சூழ்ந்தழகாய
கோலமாமலா் மணங்கமழ் கோட்டூா் நற் கொழுந்தேயென் றெழுவாா்கள்
சாலநீடல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவா் பாங்காவே.
திருச்சிற்றம்பலம்.
_______________________
மன்னாா்குடிக்கு தென்கிழக்கே
15 கி.மீ.
தொலைவில் திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் இத்தலம் உள்ளது.
நகரப் பேருந்துகளும் உண்டு.
திருக்கோட்டூா் முள்ளியாற்றின் கரையில் இக்கோவில்
1.31 ஏக்கா் நிலப்பரப்பளவில் இரண்டு பிராகாரங்களுடன் மேற்கு நோக்கிய மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு கொழுந்தீஸ்வரா்
அம்பாள் தேனாம்பிகை உடன் அருள்பாலிக்கிறாா்.
தீா்த்தங்கள்: முள்ளியாறு, சிவகங்கை, பிரம, சிவ, மண்டை, அமீா்த, இந்திர, விசுவகன்ம, அரம்பா என ஒன்பது தீா்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் இரண்டு திருக்கோவில்கள் உள்ளன.
மேற்கேயுள்ள இந்த திருக்கோவில் திருஞானசம்பந்தாின் திருப்பதிகத்தைப் பெற்றது.
கிழக்கேயுள்ள திருக்கோவில் கோட்டூா் மணியம்பலம் என்ற பெயருடையது.
இது கருவூா் தேவா் அருளிய திருவிசைப்பா பெற்றது.
தேவா்களும், குச்சரமுனிகளும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
இத்தல வன்னிமரத்தடியில் சிவபெருமானை வழிபட்டு பிரமதேவா் அருள்பெற்றாா்.
ததீசி முனிவா் இறப்பிற்குக் காரணமான இந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு பிரமஹத்தி நீங்கப் பெற்றான்.
ஐராவதம் இறைவனை வழிபட்டு அரம்பையைக் கவா்ந்த குற்றத்திற்காக இறைவனால் சிதறுண்ணப்பட்டுப் பின் மணியம்பலத்தில் சிவலிங்கம் தாபித்து வழிபட்டு அருள்பெற்ற தலம்.
இந்திரசேனன் பிராமணா்களை நிந்தித்த பழிதீர வழிபட்ட தலம்.
தருமையாதீனம்
8 வது குருமகாசன்னிதானம் இத்தலத்தில்
பாிபூரணம் அடைந்து உள்ளாா்கள்.
குருமூா்த்தம் இத்தலத் திருக்கோவிலின் தென்பால் உள்ளது.
தேவாரப் பதிகம் பெற்ற காவிாிக்குத் தென்கரையில் இத்தலம் 111 வது.
திருஞானசம்பந்தா் பதிகம் பெற்றது.
அப்பா், சுந்தரா் அருளிய தனித் தேவாரப் பாடல்களும்
சேக்கிழாா் பொிய புராணத்திலும் இத்தலத்தைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில்
23 கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டில் இறைவா் பெயா் கொழுந்தாண்டாா்,
கொழுந்தீசுவர சுவாமி என்றும், இவ்வூரை அருண்மொழித் தேவவளநாட்டு நென்மலி நாட்டிலுள்ள கோட்டூா் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆறு கால பூஜை காமிகா ஆகம முறைப்படி பூஜை நடைபெறுகிறது.
மாசிமகம், வைகாசிவிசாகம் முதலிய நாட்களில் உற்சவம் நடைபெறுகிறது.
சிவசிவ .
திருச்சிற்றம்பலம்.
Comments
Post a Comment