திருமாந்துறை ஸ்ரீ பாலாம்பிகை அம்மையுடன் ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருத்தலம்.



செய்த தவறுக்கு மனம் வருத்தம் கொண்டால் மன்னிப்பு உண்டு . . .
திரு அண்ணாமலையில் சிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய நான் முகனின் சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம்.
தனது மரண பயம் நீங்க மார்க்கண்டேயன் தவமிருந்து மரண பயம் நீங்கப்பெற்ற திருத்தலம்.
தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம்.
சூரியனின் மனைவி சமுக்யாதேவி  தனது கணவனின் உக்கிரமமான வெப்பத்தை பொறுத்துக்கொள்ள தவமிருந்த திருத்தலம்.
அகலிகையைத் தொட்டதால் ஏற்பட்ட சாபத்தை இந்திரன் நீங்கப்பெற்ற திருத்தலம்.
தாய்-தந்தையை இழந்த மானுக்கு அம்மையப்பன் மான் வடிவில் வந்து பசி தீர்த்த திருத்தலம்.
ஆதிசங்கரரும், மிருகண்டு முனிவரும் அம்மையப்பனை வணங்கி ஈசனிடம் உபதேசம் பெற்ற திருத்தலம்.
ககோள முனிவரின் மனைவியும், மருதாந்தகனின் தாயுமான லீலாவதி சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம்.  
மூல நட்சத்திரத்திற்கான பரிகாரத் திருத்தலம்.
1800 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த திருத்தலம்.
பல சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திருத்தலம்.
கோச்செங்கண் சோழன் திருப்பணி செய்த திருத்தலம்.
ஸ்ரீ துர்க்கை சாந்தமாக (காலுக்கு கீழே மகிஷா சூரனின்றி) அருள்பாலிக்கும் திருத்தலம்.
நவக்கிரக சன்னதியில் சூரியன் தன் மனைவிகளுடன் அருள்பாலிக்கும் திருத்தலம்.
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற திருத்தலம்.
தேவாரப் பாடல் பெற்ற ஐம்பத்தி எட்டாவது திருத்தலம்.
சேரமான் பெருமான், சேக்கிழார், அர்ச்சுனன், சந்திரன், இந்திரன், மருதவாணர், வழிபட்ட திருத்தலம்.
நால்வரின் ஒருவரான சுந்தரர் கண் இழந்து, தடியேந்திய கோலத்தில் அருட்காட்சி தரும் திருத்தலம்.
தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவோர் செல்ல வேண்டிய திருத்தலம்.  
தோஷங்கள், சாபங்கள், பாவங்களை நீக்கும் ஸ்ரீ அழகம்மை என்னும் ஸ்ரீ பாலாம்பிகை, மங்கல வாழ்வு தரும் மந்திர நாயகி என்று போற்றப்படும் திருத்தலம்.
ஸ்ரீ பாலம்பிகை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் பிள்ளை வரம் அருளும் திருத்தலம்.
திருமண யோகமும், பலத்த மாங்கல்ய பலமும் அருளும் திருத்தலம்.
வரைவ ளங்கவர் காவிரி
வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதியு டையவன்
கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன்
ஞானசம் பந்தன்அன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர்
அல்லலும் பாவமும் இலர்தாமே.
என திருஞானசம்பந்தர் பாடி அருளிய திருத்தலம்.
அத்திருத்தலம் தான் திருமாந்துறை ஸ்ரீ பாலாம்பிகை அம்மையுடன் ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.
திருமாந்துறை, திருச்சிராப்பள்ளி-லால்குடி சாலையில், லால்குடிக்கு மூன்று கி.மீ. முன்பாகவே அதாவது திருச்சியிலிருந்து பதினைந்தாவது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய !

Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022