இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் Rameswaram Arulmigu Ramanathaswamy temple



திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை:

தலம்: இராமேஸ்வரம்
          

பாசமும் கழிக்ககில்லா                        
      அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு,      
     மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே         
   நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த 
    திரு இராமேச்சுரமே.

பாடல் விளக்கம்

நீங்குதற்குரிய பாசத்தையும் கழிக்கும் வன்மையற்ற அரக்கர்கள் போரில் இறக்குமாறு சண்டை செய்த இராமபிரான், 
சிவஞான உணர்வால் நறுமண மலர்கள் கொண்டு பூசித்த கோயில், ஒளி மிக்கதாக விளங்கும் இராமேஸ்வரம் ஆகும். 
ஆண்டு எழுந்தருளியுள்ள இறைவனை நேயம் மிகுந்த அன்பால் நித்தலும்  நினைந்து போற்றி உய்மின்.

   திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022