அறுபத்துநான்கு சிவ வடிவம் சிவ வடிவம்

 அறுபத்துநான்கு சிவ வடிவம் ॐ
: சிவ வடிவம் 

பெயர்: திரிபுராந்தக மூர்த்தி
வாகனம்: நந்தி தேவர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

* விளக்கம்:

தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி , தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி , தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும் . நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும் ” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள் .

வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள் . வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை . மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள்.

* ரதம் தயார் செய்தல்:

எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள் பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர் .உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயார் செய்தனர்.

தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேரும் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடபவாகணத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார்.

ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளை வேண்ட, தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள் படைசூழ, இந்திரன், திருமால், முருகன், விநாயகர் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி முடிவில் அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை அம்பாகக் கொண்டு நாணேற்றினார்.

* பரமேஸ்வரன் போரிடுதல்:

தேவர்களையும் காக்க வேண்டும் , சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார்.

அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்டு பூஜித்தனர். தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார். தேவர்களின் துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு "திரிபு ராந்தக மூர்த்தி" என்னும் பெயர் ஏற்பட்டது.

* தத்துவம் :

திரிபுரத்தை எரியுண்ணுமாறு செய்ததற்கு , ஆணவம், கன்மம் , மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவருள் நோக்கால் சுட்டு எரித்தான் என்று பொருள்.

* தரிசன இடங்கள்:

1. இவரை தரிசிக்க பல தலங்கள் உள்ளது அவற்றில் இரண்டு காணலாம் முதலில் கடலூரில் உள்ள திருஅதிகையாகும். இங்குள்ள இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும்.

இவர்க்கு கெடில நதியால் அபிசேகமும் வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின் இந்த சுவாமியை வழிபட நோய் குறைந்து உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும் குணமடையும் என்பது ஐதீகம்.

2. இரண்டாவதாக காணவிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தின் உள்ள கூவம் திரிபுராந்தகர் கோயில். திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.

தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறிந்துவிட்டது. அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. விநாயகரை வணங்காதது என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின் சிவன் திரிபுர அசுரர்களுடன் போரிட்டார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் "கூரம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "கூவம்' என்று மருவியது.

குறிப்பு:
கூவம் திரிபுராந்தகர் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள்.

* சிற்ப வடிவங்கள்:

மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர், கொடித்தூண், காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பம், வடக்குச்சுவர், சோழர்கால கோயில்களின் தேவகோட்டங்கள், நாயக்கர் காலத்தில் தூண்கள் என்பவற்றில் காணலாம்.

கொடும்பாளூர்
விமானத்தில் திரிபுர தகனக் காட்சி
தஞ்சைக்கோயில்
கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பம்.

சிதம்பரக் கோயில்
கலைக்கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலம்.

திருநல்லம் கோணேரிராசபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத்திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.

⚜🌺20. திரிபுராந்தக மூர்த்தி⚜🌺

🌺⚜தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். 🌺

🌺⚜நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம் அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். 🌺

🌺⚜அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும். அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல் திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம் தோற்று திரும்பினர். 🌺

🌺⚜பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள் தமது அடியார் எனவேக் கொல்ல முடியாது என்றார். மீண்டும் கடுமையான தவத்தை திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர். உடன் சிவபெருமான் அப்படியானால் தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார். தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர். 🌺

⚜🌺தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடபவாகணத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். 🌺

⚜🌺ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளை வேண்ட, தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள் படைசூழ, இந்திரன், திருமால், முருகன், வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி முடிவில் அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை அம்பாகக் கொண்டு நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து சாம்பலாயின. 🌺

⚜🌺உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபு ராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள திருஅதிகையாகும்.🌺

 ⚜🌺இங்குள்ள இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில நதியால் அபிசேகமும் வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின் இந்த சுவாமியை வழிபட நோய் குறைந்து உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும் குணமடையும் என்பது ஐதீகம்.🌺(தொடரும்) ஓம் நமசிவாய🙏🏻
 அன்றும்..இன்றும் ஒன்றிலே..எண்ணி..எண்ணி
மனத்தினால்..அலைத்திடாது..அங்குமிங்கும்..என்னுள்..ஒன்றை..நாடினேன்
அத்தனவன் ..என்னுள்ளே சராசரங்கள்
என்னுள்ளே..தேவர்..மூவர்..என்னுள்ளே
பல்லுயிர்..கோடிஜீவ..அணுக்களும்
எம்முள்ளே..அண்டபிண்ட..கூறதாய்
கலந்து..நின்ற..ஈசனே..ஓம் நமசிவாய
ஓம்..

பற்றினால் பற்றுக பற்றியபின் பற்றற்று
பித்தனாய் பிறழ.....

ஓடும் மேகங்களாய் எண்ணங்கள்
அலைந்தாலும்...
உன் செவ்விதழ்ச் சிரிப்பில் மௌனம் பேசும் !!

வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ!
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ!

 சவத்தொடு 
சமமாய் 
சவமாய்த் 
திரிந்த 
எம்மை 
சிவத்தொடு 
சமமாய் 
சிவமாய்த் 
திருத்த 
தவத்தொடு 
யாசகம் 
!  
#பாடல்: 

          #நாடியெவர் வந்தாலும் நாதனவர் முன்னாலே 
          #ஓடிச்சென் றடியவரை வருகவென் றடியவனாய்
          #வாடிடுமவர் குறைகள் நாதனவர் கேட்டறிந்து
          #பாடிடும் வாழ்வளித்துப் பாடஞ்செய் திடுவாரே.

#பாடலின்_பொருள்களைக்_காண்பதற்கு_முன்பு:  

           நமக்கு உடல் தந்து இவ்வுலகில் தோற்றுவித்து அருளிய பெருமான் நினைத்து இருந்தால், எத்தனைப் பெரிய அருள் செயல்களையும் தான் இருக்கும் இடத்தில் இருந்தே, தன்னை நாடி வரும் அடியவர்களின் உள்ளக் குறிப்பறிந்து செய்து இருக்க இயலும். ஆயினும் அடியவர்களின் முன்பு சிறு அடியவனாய் ஓடிச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அளித்து அருள்வது போன்று அளிப்பது எதற்கு என்றால்?

           பிறரிடம் இருந்து பெறப்படும் தகவலினால் அல்லாது, ஒருவரின் தேவை அறிந்து உதவிட நம்மால் இயலாது. அதனால் நம்மிடம் உதவியென்று ஒருவர் வருகின்றார் என்பதை நாம் அறிந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பெருமான் தனது நிலையில் இருந்து நமது நிலைக்கு இறங்கி வந்து அருள் செய்து உள்ளார். 

           பாடலின் பொருள்களில் ஒன்றாய் விளங்கும், உயிர்களுக்கு அன்பு செய்து இறுகப் பற்றும் ஒரு நெறியாம் சிவநெறியில் நின்று, அரனை அன்றி அருள்வதற்கு ஒரு தெய்வம் இல்லை என்று இருந்து அருள் பெற்ற மணிவாசகருக்கு, தனக்கு அன்பர் அல்லர் ஆயினும் எவர்க்கும் இரங்கி வந்து அருளும் பெருமான் எவ்வாறு அருள் செய்தார் என்பதைக் காண்பதற்கு முன்பு, அந்நிகழ்வுடன் பொருந்தி செல்லக்கூடிய மற்றொரு பொருளைக் கண்டு செல்வோம். 

#சிவசிவ 

           நம்மைத் தேடி உதவியென்று ஒருவர் ஓடி வந்தால், அவரைத் தேடிச் சென்று உதவி செய்ய நாம் ஓடிச் செல்வோம்; பிறரைத் தேடிச் சென்று உதவி செய்ய நாம் ஓடிச் சென்றால், நம்மைத் தேடி வந்து ஈசன் அருள்புரிய ஓடி வருவார். 
          #தேடி_வந்தால்_ஓடிச்_செல்வோம்: 

           நாம் அழைத்தால் வந்து எதிரே நின்று நமக்கு அருளும் பெருமான், நம்மைப் பிறருக்கு அளித்து உதவும் நிலையில் வைத்து இருப்பது எதற்கு என்றால்? நம்மிடம் பிறர் தங்களுக்கு வேண்டியதை அவர்களாக வந்து கேட்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதற்காக அல்ல, நம்மைத் தேடி உதவியென்று ஒருவர் வருகின்றார் என்பதை அறிந்தவுடன், அவரைத் தேடி நாம் ஓடிச் சென்று உதவி செய்ய வேண்டும் என்பதற்கு ஆகும். 
       #ஓடிச்_சென்றால்_தேடி_வருவார்: 

           பிறருக்கு அளித்து உதவும் நிலையில் உள்ள நாம், பிறரிடம் பெற்று தான் வாழ வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களைத் தேடிச் சென்று அளித்து உதவி செய்வோம் ஆயின், தேடிச் சென்று அளித்து உதவி செய்யும் நம்மைத் தேடி வந்து ஈசன், பிறரிடம் பெற்று தான் வாழ வேண்டும் என்ற நிலையில் உள்ள அனைவருக்கும் அளித்து உய்வதற்கான அத்தனைச் செல்வங்களையும் நமக்கு அளித்து அருள்வார். 

#ஏன்_நம்மைத்_தேடி_வந்தால்_நாம்_ஓடிச்_செல்ல_வேண்டும்?: 

           தங்களுக்கு வேண்டியதைப் பிறரிடம் மட்டுமே கையேந்திப் பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள், பிறரிடம் சென்று கையேந்தி வேண்டிக் கொள்வதற்கு முன்பு, செல்லும் வழியில் செல்லும் இடத்தில் உள்ளவர்கள் நம் துயர் நீங்கும் பொருட்டு நமக்கு வேண்டியதை அளித்து உதவி செய்வார்களா? காரணங்கள் கூறி இல்லை என்பார்களா? அல்லது ஏதேனும் சொல்லித் திட்டி விடுவார்களா? என்று எல்லாம் அவர்கள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி வருத்தும். 

           எனவே வருந்தி அவர்களாக நம்மைத் தேடி வருவதற்கு முன்பு, நாமாக அவர்களைத் தேடிச் சென்று அளித்து உதவி செய்வோம். அதனால் வருந்தி தன்னை வருத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையானது அவர்களுக்குத் தேவை அற்றதாகி விடுகின்றது. 

           இதனால் நாடி எவர் வந்தாலும் நாம் அவர் முன்பு ஓடிச் சென்று நிற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம். 

#தன்னை_நாடி_இருந்தவரைப்_பெருமான்_தேடிச்_சென்றார்:

           மன்னுயிர்களுக்கு எல்லாம் ஒரு தலைவர் என்றும், அவர் நம் உடலிடம் கொண்ட உத்தமர் என்றும், அவரை அறிந்து கொண்டு உய்ய வேண்டும் என்றால் நாம் அழுது நின்றால் போதும் என்று உரைத்ததோடு அல்லாமல், அவ்வாறே அழுது அருள் பெற்ற மணிவாசகருக்குப் பெருமான் அருள் செய்த நிகழ்வு, மேற்கண்ட பொருளொடு எவ்வாறு பொருந்தி செல்கின்றது என்பதைக் காணலாம். 

          அன்றொரு நாள் பாண்டிய மன்னர் அவையில் முதல் மந்திரியாக இருந்த மணிவாசகர், தன் ஊரையும் பேரையும் மறந்து, தன் தாயினைப் பிரிந்து வாடும் கன்றினைப் போன்று, நமக்கு உறவாய் இருந்து உடன் வந்து அருளும் பெருமானை எண்ணிக் கசிந்து உருகி இருப்பது என்றோ? என்று இருந்தார். 

          தன்னை உண்மையில் தேடுகின்ற அடியவருக்கு மிகவும் அண்மையில் சென்று அருளும் பெருமான், தன்னை நாடி இருந்தவரைத் தேடிச் சென்று ஒரு குருந்தை மரத்தின் அடியில், உயிர்கள் அனைத்தும் வந்து ஒடுங்கும் தனது நீண்ட திருவடிகளைக் காட்டி அமர்ந்து கொண்டார். 

          தன்னுடைய தேவைகளை அறிந்து பெருமான் தன்னையே அளிக்க வந்து அமர்ந்து கொண்டு இருப்பதைக் கண்டதும் மணிவாசகர் தன்னை மறந்தார். 

      தலைவர் அவர் தனது பெரும் புகழைப் பாடத் தொண்டர் அவர் உள்ளே எழுந்து அருளிக் கொள்பவர் என்பதை அறிந்தும், அறியாது நின்று கொண்டு இருந்த அவரைத் தன் புகழைப் பாடும் தொண்டருள் ஒருவராக்கி அருள் செய்தார். 

          அத்துடன் நாம் அனைவரும் உயிர்களுக்கு அன்பு செய்து இறுகப் பற்றும் ஒரு நெறியாம் சிவநெறியில் நின்று உய்வதற்கு வழியாக, மணிவாசகர் தன்னை நினைந்து கடந்து வந்த பாதையில் தன் அருளால் கடந்து சென்ற நிலைகளை, நாமும் அறிந்து கொண்டு நாளும் கடந்து செல்வதற்கு ஏதுவாக நமக்கு அவரைப் பாடமாக்கி அருளி உள்ளார். 

          இதனால் நாடி எவர் வந்தாலும் நாதன் அவர் முன்னாலே ஓடிச் சென்று அருள்வார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். 



#திருச்சிற்றம்பலம்.
நமசிவாய

Comments

Popular posts from this blog

உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை பற்றிய சிறப்புத் தகவல்கள்

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022