Nagapattinam Kayaroganeswarar Temple .. Nagapattinam Kayaroganeswarar Temple (Thirunagaikaronam)
#ஆலயதரிசனம்...
நாகபட்டினம்
காயாரோகணேசுவரர் கோயில்..
நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில் (திருநாகைக்காரோணம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது.
ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 82வது சிவதலமாகும்.நாகப்பட்டிணம் அதிபத்த நாயனார் அவதார தலம்.
மூலவர்..
காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்
தாயார்..
நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
தல விருட்சம்..
மாமரம்
தீர்த்தம்..
தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்
பாடல் வகை..
தேவாரம்
பாடியவர்கள்..
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தல வரலாறு..
புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம். இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.
பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.
ஆதி சேஷனால் பூஜிக்கப் பெற்றதால், நாகை என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்து கொண்டதால், காயாரோகணம் என்றும் பெயர். இது மருவி, காரோணம் என்றாயிற்று.
காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளது;
1. நாகைக் காரோணம்,
2. குடந்தைக் காரோணம்,
3. கச்சிக்காரோணம் காயாரோகணம் லிங்கபேசம் காயாரோகணம் ஆகும்.
கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவை இத்தலத்தின் சிறப்பு.
ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்து, உள்ளே சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியனவும் அமைந்துள்ளன. சுவாமி பிரகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் உள்ளனர். இத்தலத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், அர்த்தநாரீசுவர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்; சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம்.
சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவை வழங்கிய தலம்; இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.
தல சிறப்புகள்..
நாகப்பட்டினம் - அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு முத்தி அடைந்தத் திருப்பதியாகும்.அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை, நாகைக்காரோணம் திருக்கோயிலில் உள்ளது.
சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார்நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பதியாகும்.
ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர், நடனம் - பாராவாரதரங்க நடனம்).
கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.
மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.
இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்.
ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன; முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை.
சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது.
நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம்.
குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது.
நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும். அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது.
ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது.
மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:
“இந்நூலில் பல நயங்கள் மிகுந்துவிளங்கும். சொல்லணி, பொருளணி, தொடைநயம், பொருட்சிறப்பு, சுவைநயம், நீதி, சிவபக்தி, சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”
ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.
2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கிப் "சோறு எங்கு விக்கும்?" என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரைசுவரொன்றில் "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..." என்று எழுதி நிறுத்தி விட்டு, பசிதீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாமடி "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.
திருத்தலப் பாடல்கள் தொகு
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.
வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே..
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே..
சுந்தரர் பாடிய பதிகம்
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே..
விழாக்கள்..
வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா நடைபெறுகிறது. வருடா வருடம் ஆனி மாதம் நடைபெறும் பஞ்சகுரோச விழாவில் பெருமான் சாலிசுக மன்னனுக்கு திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்து முக்தி மண்டபத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு பஞ்சகுரோச யாத்திரைத்தலங்களாகிய பொய்கைநல்லூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய சப்த ஸ்தலங்களுக்கும் சென்று தீர்த்தம் கொடுத்து மறுநாள் காலையில் வந்து காரோணப் பெருமான் கோபுர வாசலில் சாலிசுக மன்னனுக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுப்பதை பஞ்ச குரோச விழாவாகக் கொண்டாடுகின்றனர். நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி 10 நாள் விழா சிறப்பாக நடைபெறும்.
அமைவிடம்..
நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது...
# ஆலயதரிசனம் ...
Nagapattinam
Kayaroganeswarar Temple ..
Nagapattinam Kayaroganeswarar Temple (Thirunagaikaronam) is one of the places where songs were sung.
Ithalam is located in Nagapattinam district in the state of Tamil Nadu. It is a myth that the Lord gave a wedding present to Agathiyar at this place. It is known as the place where Adipatta Nayanar appeared.
Superstition (mythology) is the place of worship of Adiseshan, Pundarika Sage, Agathiyar, Ambikai, Murugan, Thirumal, Visitor, Musukuntan, Arasakesari, Visithrakavasan, Viruragan, Pathirasenan, Parkaran, Mithran, Kalakandan, Chandadaruman etc. Cauvery is the 82nd red spot on the south coast of Thevarapatal.
Source ..
Kayaroganeswarar, Adipuranar
Mother ..
நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
தல விருட்சம் ..
மாமரம்
Theertham ..
Deva Theertham, Pundarika Theertham
Song Type ..
Thevaram
Singers ..
Upper, Sambandar, Sundarar
Head History ..
Thirunagai Karonam is the 82nd place on the south bank of the Deivaponni river in the Chola region of the country, which is full of holy places and theerthams. It is characterized by a trio of murti, thalam and theertham.
The Thala Purana refers to this as the Adi Purana and the Swami as the Adi Puraneswarar as it extends beyond many periods of service.
Worshiped by Adi Seshan, it is also known as Nagai and Kayaroganam because the Lord ascended the sage Pundarika in his abode. It became known as Maruvi, Karonam.
There are three temples in Tamil Nadu named after Karonam;
1. நாகைக் காரோணம்,
2. குடந்தைக் காரோணம்,
3. Kachikkaronam Kayarokanam Lingapasam Kayarokanam.
Passing through the unfinished tower gate at the front of the temple facing east, Nagaparana Ganesha, Sutaiyalana Nandi and Mukti Mandapam are the highlights of the place.
Passing through the five-tiered tower gate, the Ambal Sanctuary is located to the south and the flagpole is located nearby. In the Swami Prakaram, there is the Thiyagarajamoorthy Sanctum nearby and the Sundarar opposite. In this place, one can see the idols of sixty three, Pundarika Sage, King Salisuka, Lord Murugan, Kajalakshmi, Dasarathan established Saneeswaran, Exhibitor, Natarajar, Pixadanar and Adipathar. You can also visit Sundaravidankara at the Thiyagaraja Sanctuary. You can see the Sapta Rishis and Somaskandar behind the source Kayarogana Swami. Mawdip Pillaiyar is located near the place Virukshamana Mamaram.
Dakshinamoorthy, Adimudikana Annal, Arthanarisuvar, Durga and Pitsadanar are in the group of Moolavar Karuvarai. Nearby is the Chandikeswarar Sanctuary.
The Pundarika Theertham called Sarva Theertham is located to the west of the temple, the Deva Theertham called Sivagangai is located to the west of the Mukti Mandapam and the river Upparu. The sea is also considered to be the best place for bathing on special days.
The site where the Lord gave a wedding present to the refugees; The place where the Lord appeared to the Sapta Rishis from the original lingam and gave the Somaskandara view.
The place is also the venue for the Saptasthana festival, a Panchakurosa pilgrimage that marks the wedding of the Salisuka king.
The site where the Lord gave Sundara a horse, pearls, navamanis, silk, santham, surikai, etc .; Legend has it that the horse-drawn carriage festival at this temple has been held for the Sundaramoorthy Swamis ever since, as the Lord gave his chariot to Sundara.
Head Specials ..
Nagapattinam - Adipatta Nayanar incarnated and worshiped at Tirupati. The statue of Adipatta Nayanar is in the Nagaikaronam temple.
Nagapattinam Thirunagar "Nulaipadi" referred to by Cheikh Peruman is now given as "Nambiarnagar". This is a post about Nagapattinam.
One of the seven venues. (Thiyagaraja - Sundara Vidangar, Dance - Paravaradharanga Dance).
Ithalam has a pearl hall like a handkerchief and a coin.
Edited by three greats. Site where Arunagirinathar's songs were also received.
Itala Ratam is a glass chariot.
Seven inscriptions have been copied; These are the inscriptions of the time of the first king, Kulothungan etc.
It is one of the capitals of the Chola dynasty.
We know the son of Nagapattinam who went to Nagalokam by Chola Pilathuvaram and gathered Nagakanni by the tenth as the royal youth of Thondai Nadu.
It is said that the name of a short story writer is Nannakaiyar.
The temple is located in the center of the city, 180 meters blue and 75 meters wide, with two prakaras facing east.
Pramorsavam will be held in Vaikasi, Pundarika Maharishi Unity in Ani Ayilya and Panchak Kurosa Utsavam in Ani Krishna Paksha Ashtami. Then, after giving the wedding present to Salisukan, leave for Pallak and go on a Panchakurosa pilgrimage to Poyiur, Papagovil, Sikkal, Balur, Vadakudi, Thatti, Nagore the next morning, reach Naga and the tower gate darshan takes place.
Adipatta Nayanar festival is celebrated in Avani, Samudra Tirtha Wari and Panguni Uttara festival for Lord Thiyagaraja are held on the new moon and Masi Maga days. Sangabhishekam is held on Karthika Mondays.
Nagaikkaronapuranam 61 - This book with films and 2506 songs was composed by Mahavithuvan Meenakshi Sundaram Pillai and debuted in 1860.
Mahavithuvan Pillai was accompanied by their student Dr. U.W. Swaminatha Iyer explains the wonderful glories of this myth as follows:
“There are many tricks in this book. It is full of eloquence, meaning, touch, materialism, taste, justice, red devotion, red-headedness, Nayanmar pride and many more. Tamil Nadu must have done penance to get this cup of coffee which is a taste bud. Anyone who wants to enjoy the votes of many poets together should read this book. ”
It is interesting to know that Pillai and Sundarar have interpreted every song of the hymn on the title in this myth, just as the Cheikh lectured on every song of the Gnanasambandar hymn.
Thiruvaduthurai Aadeenam published this legend with 2506 songs in the year 1970, with a commentary and gave it to the Tamil component Nallulak and it is worth mentioning here with gratitude.
Thirunasambandar Thiruvakku is the sea dragon of the learned. When Kalamekap Puluvar came to this town, he was hungry and asked, "Where will the rice sell?" He asked. The boys replied that it would go down their throats. (Selling also means giving in the case of speech.) The joker gets angry at the boys and writes on a wall, "In order to lash out at them," "Pakku plucks and plays ..." The history found in the solo collection is that Messi went on to educate the children after seeing that it was written "Nannakai Tamiluraikum Nannakai".
Edit songs
Below are some of the Thevara records of the place:
Record sung by Thirunavukkarasar
The widowed father softens the people and the spin
Do not feel the pain of falling into the reaction
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி நீரே.
Vaiyanai Vaiya Munda Malangan with appearance
When it comes to doing things, the direction is Siramon Rentung
Kaiyanai sea environment with Naga Karonang temple
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே ..
Record sung by Thirugnanasambandar
God bless you
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
In reaction the lads worship by fate
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
Barore Professional Service Wall Three
Who cares
Thera Vizhavovach Selvan screened
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே ..
Record sung by Sundarar
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
You're a real spit fire and that's exactly what we like on this site CC!
செத்தார்தம் எலும்பணிந்து சேவேரித் திரிவீர்
You hid your wealth
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
Kathuri Kamalsanthu should work
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே ..
Festivals ..
The festival is held in Vaikasi Visakhapatnam. During the annual Panchakurosa festival in the month of January, Lord Salisuka gives a wedding presentation to the king and leaves the Mukti Mandapam in the early morning. The display is celebrated as a famine. A 10-day festival will be held for the Nilayadatchi Goddess starting on the day with the Parani star in the month of August.
Location ..
From Nagapattinam Railway Station, the temple is 2 km away. Is in the distance. Buses are available from Chennai, Kumbakonam, Thanjavur, Thiruvarur, Tiruchirappalli, Mayiladuthurai etc.
Comments
Post a Comment