திருத்தலம்: திருக்கோட்டூா். --------------------------------- 🌸🌸🌸🌸🌸🌸🌸 சுவாமி: ஸ்ரீ கொழுந்தீஸ்வரா். அம்பாள்: ஸ்ரீ தேன்மொழியம்மை, தேனாம்பிகை. தீா்த்தம்: அமிா்த தீா்த்தம். தலவிருட்சம்: வன்னி. ______________________ திருஞானசம்பந்தா் சுவாமிகள் அருளிய தல தேவாரப் பாடல்: -------------------------------------- இரண்டாம் திருமுறை. ------------------------------------- பண் : நட்டராகம். -------------------------------------- நீலமாா் தருகண்டனே நெற்றியோா் கண்ணனே யொற்றை விடைச் சூலமாா் தருகையனே துன்றுபைம் பொழில்கள் சூழ்ந்தழகாய கோலமாமலா் மணங்கமழ் கோட்டூா் நற் கொழுந்தேயென் றெழுவாா்கள் சாலநீடல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவா் பாங்காவே. திருச்சிற்றம்பலம். _______________________ மன்னாா்குடிக்கு தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் இத்தலம் உள்ளது. நகரப் பேருந்துகளும் உண்டு. திருக்கோட்டூா் முள்ளியாற்றின் கரையில் இக்கோவில் 1.31 ஏக்கா் நிலப்பரப்பளவில் இரண்டு பிராகாரங்களுடன் மேற்கு நோக்கிய மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு கொ...